Subscribe - Daily Updates

Hi manisat

#ref-menu

Thursday, September 25, 2014

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் சுற்றுவட்ட பாதையை அடைந்தது: இந்தியா வரலாற்று சாதனை!

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் சுற்றுவட்ட பாதையை அடைந்தது: இந்தியா வரலாற்று சாதனை!


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. ரூ.460 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் 300 நாட்களுக்கும் அதிகமாக விண்ணில் பயணம் செய்து திட்டமிட்டப்படி இன்று காலை செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.

அப்போது அதில் உள்ள லாம் என்ஜின் மற்றும் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள 8 சிறிய என்ஜின்கள் 24 நிமிடங்கள் எரியூட்டப்பட்டு அதன் வேகத்தை குறைத்து செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த அரிய நிகழ்வை பெங்களூர் பீனியாவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி நேரில் பார்வையிட்டார்.

இந்த திட்டத்தின் வெற்றி மூலம், முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.


சரியாக காலை 7.59 மணிக்கு மங்கள்யான் விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதை இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தினார்.


உலகமே ஆவலோடு எதிர்பார்த்திருந்த இந்த அரிய நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பார்வையிடுட்டார்.


பிரதமர் மோடி பெருமிதம்:


மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதைப் பாராட்டிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "புதிய வரலாறு படைத்துவிட்டோம்" என்றார். தொடர்ந்து பெருமிதம் பொங்க பேசிய அவர்: "நமக்கு தெரியாத ஒன்றை சாத்தியப்படுத்தியிருக்கிறோம். அடைய முடியாததை அடைந்திருக்கிறோம்.


மங்கள்யான் விண்கலத்தை, 65 கோடி கிலோமீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடக்கச் செய்து, மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்டதை செய்து காட்டியிருக்கிறோம். கற்பனைக்கு அப்பாற்பட்ட இலக்கை அடைந்துள்ளோம். முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட‌ப் பாதைக்குள் விண்கலத்தை செலுத்திய பெருமையை இந்தியாவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் பெற்றுத் தந்திருக்கின்றனர். அதுவும், மிகக் குறைந்த செலவில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதிக் கட்டுப்பாட்டுகளை நெருக்கடியாக கருதாமல் விஞ்ஞானிகள் இந்த சாதனையை புரிந்துள்ளனர்.


செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பப்பட்ட 51 விண்கலங்களில் இதுவரை 21 மட்டுமே வெற்றியடைந்துள்ளது. ஆனால், நாம் தடைகளைக் கடந்து வெற்றி கண்டுள்ளோம்" என இஸ்ரோ விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டினார்.


மங்கள்யான் கடந்து வந்த பாதை:


கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி25 ராக்கெட் மூலம் பிற்பகல் 2.38 மணிக்கு மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த மங்கள்யான், நியூட்டன் 440 திரவ நிலை இயந்திரம் இயக்கப்பட்டதன் மூலம் 23,550 கி.மீட்டருக்கு மேலே உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு இயந்திரங்கள் படிப்படியாக இயக்கப்பட்டதால் சுற்றுவட்டபாதையில் மங்கள்யான் மெல்ல மெல்ல மேல் எழுந்தது.


இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி புவி ஈர்ப்பு விசையில் இருந்து விலகி 66.6 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை நோக்கி மங்கள்யான் தனது பயணத்தை தொடங்கியது. சந்திரனின் சுற்று வட்டப்பாதை உள்ளிட்ட முக்கிய பாதைகள் அடுத்தடுத்த நாட்களில் வெற்றிகரமாக மாற்றப்பட்டன. மங்கள் யானின் ஒவ்வொரு அசைவுக்கும் தேவை யான ஆணைகளை இஸ்ரோ விஞ் ஞானிகள் பெங்களூரில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அவ்வப்போது கொடுத்துக்கொண்டே இருந்தனர்.


மங்கள்யான் விண்கலம் கடந்த ஜூன் 12-ம் தேதி 2-வது வழித்தடத்துக்கு மாற்றப்பட்டது. 300 நாட்களை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் கடந்த 16-ம் தேதி ம‌ங்கள்யானில் மேற்கொள்ள வேண்டிய தகவல் பரிமாற்ற ஆணைகள் பதிவேற்றம் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து 3-வது வழித்தடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.


செவ்வாய் கிரகத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் மங்கள் யானில் கடந்த 10 மாதங்களாக செயல்படாமல் இருந்த இயந்திரங்களை இயக்கி சோதிக்க இஸ்ரோ விஞ்ஞானி கள் திட்டமிட்டனர். அதன்படி கடந்த திங்கள்கிழமை மங்கள்யான் விண் கலத்தில் உள்ள‌ முக்கிய திரவநிலை நியூட்டன் 440 இயந்திரத்தை சுமார் 4 வினாடிகள் இயக்கினர்.


இதற்கு 0.567 கிலோ எரிபொருள் செலவானது. இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக அமைந்தது. இதனையடுத்து ஏற்கெனவே திட்டமிட்டது போல், மங்கள்யான் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவொருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.


இந்தியா புதிய சாதனை:


மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட‌ப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதால் இந்த சாதனையைச் செய்த நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஏற்கெனவே இதனை சாதனையை படைத்துள்ளன. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட‌ப் பாதைக்குள் விண்கலத்தை செலுத்திய பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.


இதுவரை செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பப்பட்ட 51 விண்கலங்களில் 21 மட்டுமே வெற்றியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Monday, September 22, 2014

actor ajith gift to car driver - கார் டிரைவருக்கு ஐ போன் பரிசு கொடுத்து அசத்திய அஜீத்

actor ajith gift to car driver - 
கார் டிரைவருக்கு ஐ போன் பரிசு கொடுத்து அசத்திய அஜீத்


தல அஜீத்தோட மனிதாபிமானம் எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். அஜீத் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு செய்யும் நல்ல விஷயங்கள் அவருடைய ரசிகர்கள் வட்டாரத்திலும், நண்பர்கள் வட்டாரத்திலும் அவருக்கு மிகப்பெரிய மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய கார் டிரைவருக்கு ஐ போன் ஒன்றை பரிசாக கொடுத்து அசத்தியிருக்கிறார் அஜீத். ஒருநாள் காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அவருடைய கார் டிரைவர் விலை மலிவான செல்போனை உபயோகித்துக் கொண்டிருந்ததை அஜீத் பார்த்துள்ளார். அவர் முன்னால், அந்த போனை வைத்துக்கொண்டு அப்போது வந்த அழைப்பைகூட எடுத்துபேச ரொம்பவும் தயங்கியுள்ளார்.

அதனை புரிந்துகொண்ட அஜீத், உடனே அருகிலுள்ள செல்போன் கடையில் காரை நிறுத்தச் சொல்லி, விலையுயர்ந்த ஐ போன் ஒன்றை தன்னுடைய டிரைவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். மேலும், கார் ஓட்டும்போது ஹெட் செட் அணிந்து வண்டியை ஓட்டுமாறு டிரைவருக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.

Actor Simbu aka Silambarasan Kissing Harshika? - Caught on Cam

பொது இடத்தில் நடிகைக்கு முத்தம் கொடுத்த சிம்பு?



சர்ச்சைகளில், கிசுகிசுக்களில் சிக்குவது என்பது சிம்புவுக்கு ஒன்றும் புதிதல்ல. ‘வல்லவன்’ படத்தில் நயன்தாராவின் உதட்டை கடித்து அதை பேனர்களில் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர், அவருடன் ஓட்டல் அறையில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

அவருடனான காதல் முறிந்தபிறகு ஹன்சிகாவுடன் காதல் கொண்டார். அவருடன் பப்புகளில் கெட்டிப்பிடித்துக் கொண்டிருந்த படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர் அவருடனான காதலும் முறிந்துவிட்டதில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார் சிம்பு.

அதாவது, பொது இடத்தில் ஹர்சிகா என்ற நடிகைக்கு சிம்பு உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பதுபோல் வீடியோ ஒன்று இண்டர்நெட்டில் உலவிக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இருவரும் காதலித்து வருகிறார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்நிலையில், அந்த வீடியோவில் இருப்பது சிம்புதானா? என்ற சந்தேகமும் சிலருக்கு எழுந்துள்ளது.

Sunday, September 21, 2014

padmini-prakash-became-the-first-transgender-television-news-anchor

இந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் பத்மினி பிரகாஷ் இந்தியாவின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் பத்மினி பிரகாஷ்

கோவை: லோட்டஸ் டிவியில் பத்மினி பிரகாஷ் (31) என்ற திருநங்கை, செய்தி வாசிப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இதன்மூலம், இத்துறையில் பணிபுரியும் முதல் திருநங்கை என்ற பெருமையை பத்மினி பிரகாஷ் பெற்றுள்ளார். கோவையை சேர்ந்த திருநங்கை பத்மினி பிரகாஷ். இவருக்கு தற்போது 31 வயதாகிறது. ஆணாக இருந்த இவர் பிகாம் முதலாம் ஆண்டு படிக்கும் போது தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை இவர் உணர்ந்துள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடியினால் கோவையை விட்டும் குடும்பத்தை விட்டும் பிரிந்து சென்ற அவர், நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் கோவைக்கு திரும்பினார். அழகான தோற்றம் காரணமாக திருநங்கைகளுக்கு இடையே நடைபெற்ற பல்வேறு அழகிப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.தற்போது கோவையில் இருந்து செயல்படும் லோட்டஸ் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளராக பணியாற்றுகிறார். ஆகஸ்ட் 15ஆம் நாள் சுதந்திரதினத்தன்று தனது முதல் செய்திவாசிப்பாளர் பணியை லோட்டஸ் டிவியில் தொடங்கியுள்ளார் பத்மினி பிரகாஷ். தினசரி இரவு 7மணி செய்திகளை வாசிக்கிறார் பத்மினி பிரகாஷ். செய்திவாசிப்பதோடு மட்டுமல்லாது தற்போது டிவி சீரியல் ஒன்றிலும் பத்மினி பிரகாஷ் நடித்து வருகிறார். பத்மினி பிரகாஷ்க்கு திருநங்கைகள் மட்டுமல்லாது ஏராளமானோர் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளனர். 

Topics: padmiini prakash, transgender, lotus tv, coimbatore, பத்மினி பிரகாஷ், திருநங்கை, லோட்டஸ் டிவி, கோவை 
English summary Padmini Prakash became the first transgender television news anchor in India. On the eve of Independence Day on 15 August 2014, she for the first time read out the day’s headlines from a teleprompter for the Lotus News Channel Studios.

DMCA.com
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More