Sollvadhu Yellam Unmai Lakshmi-Ramakrishnan - லட்சுமி ராமகிருஷ்ணனின் பார்வையில்....
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் 17 வயது சிறுவனுக்கும் 40 வயது பெண்ணிற்கும் இடையே ஏற்பட்ட தவறான தொடர்பு பற்றி பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். அடுத்த சில தினங்களுக்கு முன்பு அக்கா கணவனுடன் தவறான தொடர்பில் இருப்பதாக தங்கையே புகார் சொல்கிறார் அதற்கும் பஞ்சாயத்து செய்து வைத்தார். கள்ள தொடர்பு, காதல் பிரச்சினை, மட்டுமல்லாது பெற்ற தாயை கவனிக்க மறுக்கும் பிள்ளைகள் பற்றியும் நிகழ்ச்சியில் பேசுகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். தினசரி பல சிக்கல்களை கேட்டு அதற்கு தீர்வு சொல்லும் இவர் பெரும்பாலான கள்ள உறவுகளுக்குக் காரணம் செல்போன்தான் என்கிறார். பெண்களை மதிக்காமல் மிதிக்கிற ஆண்கள்தான் இங்கே இருக்கின்றனர். ஏழைமக்கள் மத்தியில் மட்டுமல்ல நடுத்தர, உயர்தர குடும்பத்திலும் இந்த பிரச்சினை இருக்கிறது. உயரதிகாரியாக இருக்கும் பெண்கள் படும் பாடு சொல்ல முடியாது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை கொடுமையாக இருக்கிறது. உறவுகளுக்குள் நடக்கிற பாலியல் கொடுமை, பெற்ற தந்தையே மகளை பாலியல் பலாத்காரம் செய்வதும், அதற்கு அம்மாவே உடந்தையாக இருக்கிறார். தெருக்களில் ஒட்டப்படும் கவர்ச்சி போஸ்டர்களால் பெண்களும்,குழந்தைகளும் கூட பாதிக்கப்படுகின்றனர். சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதை போஸ்டர் போட்டு ரோட்டில் ஓட்டுவது சரியில்லை. பெரும்பாலான கள்ளத்தொடர்பு உருவாக காரணம் செல்போன்தான். சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை பெரும்பாலானவர்கள் கையில் செல்போன் புழக்கம் உள்ளது. இதுதான் பிரச்சினையின் மூலகாரணமாக இருக்கிறது. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் தெரிந்து கொண்ட பாடம் இது என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதிலும் நிறைய உண்மை இருக்கத்தான் செய்கிறது.