Subscribe - Daily Updates

Hi manisat

#ref-menu

Saturday, November 9, 2013

பற்களில் கரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?

பற்களில் கரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?


என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.


பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..


நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.


இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..


கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.


வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்....



{கிடைத்த தகவலை பகிர்ந்துள்ளேன்... எவ்வளவு உபயோகிக்க வேண்டும், எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதையும் தெரிந்தவர்களிடம் உறுதி செய்து கொள்ளவும்.

ரிலாக்ஸ் ப்ளீஸ்

0 comments:

Post a Comment

THANKS FOR VISIT

Note: Only a member of this blog may post a comment.

DMCA.com
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More