10 ரூபாய்க்கு அம்மா குடிநீர்:
புரட்சி தலைவி அம்மா அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார்.
தாய் உள்ளம் கொண்ட, தங்க தாரகை புரட்சி தலைவி அம்மா அவர்கள் மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.
ஏழை எளிய பாமர மக்கள் பயன்பெறுவதற்காக விலையில்லா அரிசி, நியாய விலை கடைகளில் குறைந்த விலையில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவை வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மலிவு விலை காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏழைகளும், கூலித் தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் அனைத்து மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு இட்லி, பொங்கல், தயிர் சாதம், பல்வேறு உணவு வகைகள் மிகவும் குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறது.
இதுபோன்று ஏழை, எளிய மற்றும் பொது மக்களின் நலன் கருதி அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் ‘அம்மா குடிநீர்’ உற்பத்தி நிலையங்களை அமைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் மினரல் வாட்டர் தயாரிக்கும் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் ‘அம்மா குடிநீர்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 1 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்டு நீண்டதூரம் செல்லும் அரசு பேருந்துகளில் விற்பனை செய்யப்படும். சென்னையில் உள்ள பேருந்து நிலையங்கள், மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் விற்பனை செய்யப்படுகிறது.
ரெயில்வே நிர்வாகம் 1 லிட்டர் குடிநீர் பாட்டில்களை ரூ.15–க்கும், தனியார் நிறுவனங்கள் ரூ.20–க்கும் விற்பனை செய்கின்றன. ஆனால் ‘அம்மா குடிநீர்’ 1 லிட்டர் பாட்டில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஏற்கனவே அறிவித்தப்படி ‘அம்மா குடிநீர்’ விற்பனை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதன் தொடக்க விழா காலை 11.15 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்து நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘அம்மா குடிநீர்’ உற்பத்தி நிலையத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து
வைக்கிறார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமை செயலாளர் ஷீலாபால கிருஷ்ணன், போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் பிரஜ்கிஷோர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இத்திட்டத்தை நாளை தொடங்கி வைக்கும் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு கோடானுகோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அம்மாவின் உண்மை தொண்டன்........ பொன்மலை ஜாபர்
0 comments:
Post a Comment
THANKS FOR VISIT
Note: Only a member of this blog may post a comment.