Subscribe - Daily Updates

Hi manisat

#ref-menu

Friday, February 15, 2013

sun tv will telecast Mahabharatam Tamil serial on sunday morning 10am


sun tv will telecast Mahabharatam Tamil serial on sunday morning 10am



ஞாயிறு காலை 10 மணிக்கு 
சன் டிவியில்
 மகாபாரதம்

For the first time in the history of Tamil Television the magnum opus epic “Mahabharatham” is produced in Tamil by Cinevistaas. Poovilangu Mohan, OAK Sundar, Ilavarasan, Devipriya, Pooja Lokesh, Iswarya, Director Suresh Krishna, Cinematographer Ganesh at the Mahabharatham. The best of technicians from TV & Film industry are involved in creating this great epic.


ஞாயிறு காலை 10 மணிக்கு... மகாபாரதம் தொடரை சினி விஸ்டாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சினிமாவில் பிரபலமாக உள்ள தொழில் நுட்பக்கலைஞர்களின் கைவண்ணத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த தொடர் ஞாயிறு காலை 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.


ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை எத்தனை முறை பார்த்தாலும், படித்தாலும் அலுக்காது. புதியது போலவே இருக்கும். தூர்தர்சனின் வருகைக்குப் பின்னர் அவற்றை காட்சி வடிவமாக பார்க்க நேர்ந்தது. இந்தி பேசினாலும் அதன் கதை எல்லோருக்கும் தெரியும் என்பதால் மக்கள் புரிந்து கொண்டனர். ராமாயண, மகாபாரத இதிகாசத் தொடர்கள் பின்னர் டப்பிங் செய்யப்பட்டு சன் டிவியில் ஒளிபரப்பானது. 52 வாரங்களும் மக்கள் அலுக்காமல் பார்த்தனர். அதே தொடர் இப்போது தமிழில் பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. குற்றாலமலை அடிவாரத்தில் இயற்கை சூழலில் தயாராகிவரும் இந்த தொடர் வரும் ஞாயிறு காலை 10 மணிமுதல் ஒளிபரப்பாகிறது. 700 கலைஞர்கள், பிரம்மாண்டமான செட்கள், சினிமா பிரபலங்களின் இயக்கம், இசை என தயாராகிவரும் மகாபாரதம் தொடர்பற்றி ஒரு சிறப்பு பார்வை.

இதிகாசத்தின் மொத்த அம்சங்களும் மகாபாரதம் கதை மிகப்பெரியது. இதுவரை எடுக்கப்பட்ட சீரியல்களில் கால நேரம் கருதி முக்கிய அம்சங்களை மட்டுமே காட்சிப் படுத்தியிருப்பார்கள். ஆனால் இந்த தொடரில் நுணுக்கமான முறையில் ஒவ்வொரு அம்சங்களையும் காட்சி படுத்தியிருக்கின்றனராம்.

பீஷ்மரின் தியாகம் மகாபாரதம் என்றாலே பாண்டவர்கள், கௌரவர்கள், திரௌபதி, சகுனி, மற்றும் கிருஷ்ணா ஆகியோர்தான் நினைவுக்கு வருவார்கள். இந்த தொடரில் சாந்தனு தொடங்கி கங்காதேவி, பீஷ்மரின் தியாகம் போன்றவை நுணுக்கமானமுறையில் படமாக்கப்பட்டுள்ளனவாம்.

பிரபஞ்சனின் எழுத்தில் மகாபாரதம் சிறுவயதில் கேட்ட கதை, பள்ளியில் படித்த கதை, தூர்தர்சன், சன்டிவியில் பாத்த தொடர் என்றாலும் தமிழில் நேரடியாக தயாராகும் முதல் இதிகாசம் மகாபாரதம். சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் இதற்கான கதையை தமிழுக்கு ஏற்ப எழுதியுள்ளார்

700 நடிகர், நடிகையர்கள் இந்த தொடருக்காக நடிகர் பட்டாளமே களம் இறங்கியுள்ளது. 700 நடிகர்கள், துணை நடிகர்கள் மகாபாரதம் தொடரில் நடித்துள்ளனர். அழகான உடைகள், நகை அலங்காரம், பிரம்மாண்டமான செட்கள் என அசத்தியிருக்கிறார்களாம்.

பீஷ்மராக ஓ.ஏ.கே சுந்தர் பிரபலமான சின்னத்திரை நட்சத்திரங்கள் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வியாசராக பூவிலங்கு மோகன், பீஷ்மராக ஒ.ஏ.கே. சுந்தர், சாந்தனுவாக இளவரசன், சத்யவதியாக தேவிப்பிரியா நடித்துள்ளனர். கங்காவாக ராஷ்மி, அம்பையாக பூஜா, திரௌபதியாக

பாட்ஷா இயக்குநரின் படைப்பு அண்ணாமலை, பாட்சா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா மகாபாரதம் தொடரை இயக்கியுள்ளார். பிரபல திரைப்பட இசையமைப்பாளர் தேவா இசை அமைத்துள்ளார். பாலாஜி டெலி பிலிம்ஸ்சின் கேமராமேன் கணேஷ் இந்த தொடரின் கேமராமேனாக பணிபுரிந்துள்ளார்.

கவிஞர் பா.விஜய் கைவண்ணத்தில் மகாபாரதம் தொடரின் டைட்டில் பாடல், பின்னணி இசையை தேவா அமைத்துள்ளார். பாடல்களை கவிஞர். பா. விஜய் எழுதியுள்ளார். உணர்ச்சிப்பூர்வமான முறையில் சங்கர் மகாதேவன் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு அசோக் ராஜன் நடனம் அமைத்துள்ளார். இது ரெட் ஒன் கேமராவில் படமாக்கப்பட்டுள்ளதாம்.

SOURCE:tamil.oneindia.in












0 comments:

Post a Comment

THANKS FOR VISIT

Note: Only a member of this blog may post a comment.

DMCA.com
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More