கடல் படத்தினால் நஷ்டம் : மணிரத்னம் வீட்டில் விநியோகஸ்தர்கள் முற்றுகை
சென்னை: கடல் படத்தால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. எனவே பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதற்காக அவர்கள் மணிரத்னம் அலுலகத்தை இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மணிரத்னம் தயாரித்து இயக்கிய கடல் படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படம் முதல் நாளே பெரும் தோல்விப் படமாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் படம் குறித்து மணிரத்னம் ஏகத்துக்கும் பில்ட் அப் கொடுத்திருந்ததால், பெரும் விலை கொடுத்து படத்தை வாங்கினர் விநியோகஸ்தர்கள்.
ஆனால் படம் தோல்வியைத் தழுவியதால் நஷ்டத்துக்குள்ளாகியுள்ளனர். கடல் படம் பல அரங்குகளில் ஒரே வாரத்தில் தூக்கப்பட்டுவிட்டது.
தங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட பணத்தை மணிரத்னம் திருப்பித் தர வேண்டும் என்று கோரி, அவரது வீட்டை முற்றுகையிடப் போவதாக விநியோகஸ்தர்கள் அறிவித்தனர். இதனால் அவர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில், கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் விநியோகஸ்தர்கள். அலுவலகத்தில் நுழைந்து நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோஷம் போட்டனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போலீசார் வந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அப்புறப்படுத்தினர்.
கடல் பட நஷ்டம்! மணிரத்னம் அறிக்கை!!
ராவணன் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் கடல். கார்த்திக் மகன் கவுதமும், ராதா மகள் துளசியும் அறிமுகமாகியுள்ளனர். கடந்த பிப்.1ம் தேதி வெளிவந்த இப்படம் தோல்வியடைந்துள்ளது. இதனால் இப்படத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறி மணிரத்னம் வீட்டை விநியோகஸ்தர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது, கடல் திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெளியீட்டு உரிமைகளை மெட்ராஸ் டாக்கீஸ் மார்ச் மாதம் 2012-ஆம் ஆண்டிலேயே ஜெமினி இன்டஸ்டிரீஸ் மற்றும் இமேஜிங் லிமிடெட் நிறுவனத்திற்கு மினிமம் காரண்டி அடிப்படையில் விற்றுவிட்டது. இந்தப் பட வெளியீட்டிற்காக ஜெமினி நிறுவனம் செய்து கொண்டிருக்கக்கூடும் ஒப்பந்தங்களுக்கும் மெட்ராஸ் டாக்கீஸிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது சம்பந்தமாக வேறெந்த நபரையும் மெட்ராஸ் டாக்கீஸ் அணுகவில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மணிரத்னத்தின் இந்த அறிக்கை கடல் படத்தின் நஷ்டத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மறைமுகமாக சொல்லியிருப்பதையே குறிப்பிடுகிறது.
0 comments:
Post a Comment
THANKS FOR VISIT
Note: Only a member of this blog may post a comment.