மதுரை டவுன்ஹால் ரோடு பெருமாள் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள 86 கடைகள் இன்று 11-08-2025 இடிக்கப்பட்டது
மதுரை டவுன்ஹால் ரோடு
பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை
சுற்றியுள்ள 86 கடைகளை அகற்ற
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து
இன்று 11-08-2025 அனைத்து
கடைகளும் இடிக்கப்படுகிறது.
கோச்சடையில் இருந்து இந்த கூடலழகர் பெருமாள் கோவில் தெப்பகுளத்திற்குக் கால்வாய் வழியாக ஆண்டு முழுவதும் தண்ணீர் வந்துள்ளது. 1960-ம் ஆண்டு வரை, மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் போல் இந்தக் கோயிலிலும் ஆண்டுதோறும் தெப்ப உற்சவம், தண்ணீர் நிரம்பிய இந்த தெப்பக்குளத்தில் கோலாகலமாக நடந்துள்ளது. அதன் பிறகு இந்தக் கோயிலில் தண்ணீரில் தெப்ப உற்சவம் நடக்கவில்லை. நிலத்தில் தெப்ப உற்சவம் நடந்து வருகிறது. சாமி, மைய மண்டபத்தை மூன்று சுற்றிவந்து சென்றது. 1980-களில் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை கோயில் நிர்வாகம் வியாபாரிகளுக்கு வாடகைக்கு விட்டது.
30.ப்பது ஆண்டு குத்தகையுடன் 1980ம் ஆண்டு ஆரம்பமான கூடலழகர் பெருமாள் தெப்பம் கடைகள் 2025ம் ஆண்டு இடிக்கப்பட்டது.


#ref-menu












